தமிழகம்

50 ஆண்டுக்கு பின் சென்னை மாநகராட்சிக்கு பெண் மேயர்! பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு

61views

புகழ்பெற்ற சென்னை மாநகராட்சிக்கு 50 ஆண்டுகளுக்கு பின், பெண் ஒருவர், அதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் மேயராவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்திலேயே மிகப்பெரிய மாநகராட்சியான சென்னை பெருநகர மாநகராட்சி, 15 மண்டலங்கள் உள்ளடக்கிய, 200 வார்டுகளை கொண்டு உள்ளது. மேயர் பதவிக்கு, இதுவரை மூன்று முறை நேரடி தேர்தல் நடந்தது. தற்போது நடக்க உள்ள தேர்தலில், மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு, மறைமுக தேர்தல் நடக்க உள்ளது.பணிகள் மும்முரம்தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

தன்படி, வார்டு வரையறை, வார்டு இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, ஓட்டுச்சாவடி ஒதுக்கீடு, ஓட்டுச்சாவடிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு போன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ளன.சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, 200 வார்டுகளில் 105 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.இது, ௫௦ சதவீதத்துக்கு அதிகமாக இருப்பதாக கூறி, பெண்களுக்கான மண்டல வாரியான இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கில், மண்டல வாரியாக பெண்களுக்கு, ௧௦௫ இடங்களை ஒதுக்கீடு செய்த அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்தது. அதே வேளையில், 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதைதொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பெண்களுக்கான வார்டுகள் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடும் போட்டிஅதில், எஸ்.சி., பொதுப் பிரிவுக்கு மற்றும் எஸ்.சி., பெண்களுக்கு, தலா 16 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

மேலும், பொதுப்பிரிவு பெண்களுக்கு, 84 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 100 வார்டுகள், பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தவிர, சென்னை மாநகராட்சி மேயர் பதவியும், எஸ்.சி., பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் எஸ்.சி., பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில், பிரதான கட்சியை சேர்ந்த தி.மு.க., – அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, அக்கட்சி நிர்வாகிகளிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.அதேபோல், பிற வார்டுகளில் உள்ள, எஸ்.சி., அரசியல் பிரமுகர்கள் தங்கள் குடும்பத்து பெண்களை, அங்கு நிறுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். மறைமுக தேர்தல் என்பதால், இந்த வார்டுகளில், அனைத்து கட்சியினரும் போட்டியிட வாய்ப்புள்ளது.எந்தெந்த வார்டுகள் யாருக்கு?எஸ்.சி., பொது பிரிவு: 3, 16, 17, 18, 21, 22, 24, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200எஸ்.சி., பெண்கள் பிரிவு: 28, 31, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196பொதுப்பிரிவு பெண்கள்: 2, 8, 9, 11, 13, 14, 15, 26, 33, 34, 39, 40, 41, 42, 43, 44, 48, 51, 58, 61, 65, 66, 67, 68, 69, 71, 75, 76, 79, 81, 83, 87, 88, 91, 93, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 107, 109, 112, 113, 115, 118, 119, 122, 123, 124, 125, 126, 128, 131, 132, 134, 136, 147, 149, 150, 152, 153, 157, 158, 160, 161, 163, 164, 167, 171, 173, 174, 175, 179, 180, 183, 185, 187, 188, 191, 197இதர, 84 வார்டுகள் அனைத்து பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல் எஸ்.சி., பெண் மேயர்!சென்னை மாநகராட்சி வரலாற்றில், 1933ம் ஆண்டு முதல் மேயர் பதவி இருந்து வருகிறது.

தேர்வு செய்யப்படுபவர், ஓராண்டு மட்டுமே மேயர் பதவி வகிக்க முடிந்தது. அதன் பின், 1996ம் ஆண்டு முதல், ஐந்தாண்டுகளாக பதவிக்காலம் உயர்த்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளில், மாநகராட்சியில் 1971ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை, காமாட்சி ஜெயராமன் என்ற பெண் மட்டுமே, ஓராண்டு மேயராக இருந்தார். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால், முதல் முறையாக, பட்டியலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகிக்க ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!