தமிழகம்

5ஜி அலைக்கற்றை ஏலத்தொகை குறைந்தது ஏன்?: ‘2ஜி புகழ்’ ராசா கேட்கிறார்

49views

5ஜி ஏலத்தில் எதிர்பார்க்கப்பட்ட ரூ.5 லட்சம் கோடி தொகையை விட குறைவாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் ஏலம் சென்றுள்ளதாகவும், எஞ்சிய பணம் எங்கே சென்றது என மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என ‛2ஜி’ அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக எம்.பி., ஆ.ராசா கூறியுள்ளார்.

5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த நிலையில், முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் ஜியோ’ அதிக தொகைக்கு ஏலம் கோரி, முதலிடத்தை பிடித்தது. மொத்தமாக 5ஜி ஏலத்தில் நிறுவனங்கள் ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் எடுத்தன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மட்டும் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏலம் துவங்குவதற்கு முன்னதாக சுமார் ரூ.4.3 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.1.5 லட்சம் கோடிக்கு மட்டுமே ஏலம் போயுள்ளது.

‛2ஜி’ அலைக்கற்றை ஏலம் தொடர்பான வழக்கில் சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக எம்.பி., ஆ.ராசா இந்த 5ஜி ஏலம் தொடர்பாக கூறியதாவது: 2ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பின் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறினார்கள். ஆனால் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. 5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம்போகும் என்று மத்திய அரசே கூறியது. ஆனால் ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் ஏலம் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது என்பது பற்றி மத்திய அரசு தான் பதிலளிக்க வேண்டும். 5 ஜி ஏலம் முறையாக நடத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!