தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர், வியட்நாம், செர்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வேல்ஸ், ஹாங்காங், இங்கிலாந்து, டோகோ, உருகுவே, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த வீரர்- வீராங்கனைகள் வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சோமோரோஸ் தீவு, செர்பியா, பல்கேரியா, எஸ்டோனியா, போலந்து, தான்சானியா, கயானா, கஜகஸ்தான், மேகன் தீவு, கோஸ்டாரிகா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 வீரர் வீராங்கனைகள் சென்னைக்கு வந்தனர். இவர்களை தமிழகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் வரவேற்றனர். மேலும் இன்று இரவு பல்வேறு நாடுகளை சேர்ந்த 31 வீரர்- வீராங்கனைகள் வர இருக்கின்றனர்.