இந்தியா

44 நொடிகளில் 12 ராக்கெட் குண்டுகளை ஏவி இலக்குகளை தாக்கும் பினாகா அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெற்றிகரமாக சோதனை

92views
44 நொடிகளில் 12 ராக்கெட் குண்டுகளை ஏவி இலக்குகளை தாக்கும் பினாகா அதிநவீன ராக்கெட் லாஞ்சர் வெற்றிகரமாக சோதனை
44 நொடிகளில் 12 ராக்கெட் குண்டுகளை ஏவி இலக்குகளை தாக்கும் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் லாஞ்சர் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சோதனை தளத்தில் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இதனை சோதித்துள்ளது. இந்த ராக்கெட் குண்டுகள் மூலம் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள எதிரி இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும். பினாகா ராக்கெட் லாஞ்சர் மூலம் 44 வினாடிகளில் 12 ராக்கெட்களை ஏவ முடியும் என்பது கூடுதல் தகவல்.
முதன்முதலாக கார்கில் யுத்தத்தின் போது மலைப்பகுதிகளில் பதுங்கி இருந்த எதிரிகளின் ராணுவ தளங்களை அழிக்க, இந்தியாவால் பினாகா ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தப்பட்டது. தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள பினாகா ராக்கெட் லாஞ்சரை பொக்ரானில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்திருக்கிறது. இரவிலும் தொலைநோக்கி மூலம் செயல்படும் ஆற்றல் உள்ள இந்த கருவி, எதிரிகளின் பீரங்கிகள், கவச வாகனங்கள், ஏவுதளங்கள், கதிரலை கண்காணிப்பு கூடங்கள், கண்ணிவெடி தளங்கள் போன்றவற்றை தகர்க்க வல்லதாகும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!