தமிழகம்

13,495 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

101views

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை.

தற்போது இந்த மாணவ மாணவிகள் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு இந்த ஆண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, தற்போது வேலூர் மாவட்டத்திற்கு இலவச சைக்கிள்கள் வந்துள்ளன. மேலும் விரைவில் அம்மாவட்டத்தில் உள்ள 84 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 13,495 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!