விளையாட்டு உலகில் ’10’-ம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாடுபவர் மெஸ்சி. ’10’-ம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடுபவர்கள் ஜாம்பவான்களாக இருப்பர். இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், கால்பந்தாட்டத்தில் முன்னாள் அர்ஜென்டினா வீரர் மரடோனா, முன்னாள் பிரேசில் வீரர் பீலே வரிசையில் மெஸ்சியும் இந்த நம்பரை தனது தேசிய மற்றும் கிளப் அணிகளுக்கு அணிந்து விளையாடி வந்தார்.
இந்நிலையில பார்சிலோனாவை விட்டு விலகியுள்ள அவர் PSG அணியில் இணைந்துள்ளார். இந்த கிளப் அணியில் அவர் ’30’-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளார். இந்த அணியில் விளையாடி வரும் பிரேசில் வீரர் நெய்மர் 10′-ம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடி வருவதால் மெஸ்சி இனி ’30’-ம் நம்பர் கொண்ட ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளார். நெய்மர் தனது நம்பரை விட்டுக்கொடுக்க முன்வந்தும் மெஸ்சி வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.
மெஸ்சி முதன்முதலில் பார்சிலோனாவுக்கு விளையாடிய போது அவருக்கு கொடுக்கப்பட்டது ’30’ தானாம். அதனால் சென்டிமெண்டாக அதுவே இருக்கட்டும் என கேட்டுக் கொண்டாராம். PSG அணியும் அவர் விருப்படியே செயல்பட்டுள்ளது.