உலகம்

ஹங்கேரியில் வாகனம் மீது ரெயில் மோதி விபத்து- டிரைவர் உள்பட 7 பேர் பலி

228views
ஹங்கேரி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குன்பெஹெர்டோ கிராமத்திற்கு அருகே ரெயில்வே கிராசிங்சை வாகனம் ஒன்று கடக்க முயன்றபோது வேகமாக வந்த ரெயில் மோதியது. இந்த விபத்தில் அந்த வாகன டிரைவர் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரெயில் ஓட்டுனர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் ரெயில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என்று காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த கிராமப்புற ரெயில் கிராசிங்கில் கேட் மற்றும் சிக்னல் ஏதுவும் இல்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து அந்த ரெயில் பாதையின் பாதிக்கப்பட்ட பகுதி மூடப்பட்டதாக ஹங்கேரி ரெயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!