செய்திகள்விளையாட்டு

விம்பிள்டன் வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் இறுதிப்போட்டியில் புதிய மாற்றம்

47views

விம்பிள்டன் வரலாற்றில் முதன்முறையாக ஆண்கள் இறுதிப்போட்டியில் பெண் நடுவராக பணிப்புரிந்து உள்ளார்.

டென்னிஸ் தொடர்களில் பழமையானதும் உலகப் புகழ் பெற்ற விம்பிள்டன் தொடர் இங்கிலாந்தின் லண்டன் நகரில் கோலகலமாக நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான ஜோகோவிச், இத்தாலியை சேர்ந்த மாட்டியோ பெரெட்டினியை எதிர்த்து போட்டியிட்டார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் இரு வீரர்களும் கடுமையாக மோதினர். இதனால் முதல் செட்டில் 7-6 என போராடி முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார்.

இதை தொடர்ந்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். இதையடுத்து 6-7, 6-4, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று மகுடம் சூடினார். இந்தப் போட்டி மொத்தம் 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்றது.

செர்பியாவை சேர்ந்த வீரரான ஜோகோவிச் விளையாடிய 30வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இதுவாகும். இதுமட்டுமல்லாமல் தற்போது 20 முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.

இந்நிலையில் 1877ல் இருந்து நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில், வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு ஒரு பெண் நடுவராக பணியாற்றி உள்ளார். குரோஷியாவைச் சேர்ந்த 43 வயதான மரிஜா சிக்காக் ஆண்கள் இறுதிப் போட்டியில் நடுவராக செயல்பட்டு சாதனை படைத்துள்ளார்.

43 வயதான சிக்காக் கடந்த 15 ஆண்டுகளாக தி சாம்பியன்ஷிப்பில் நடுவராக இருந்து வருகிறார், மேலும் 10 WTA இறுதிப் போட்டிகளிலும் பணியாற்றியுள்ளார். 2014 விம்பிள்டன் பெண்கள் இறுதிப் போட்டியிலும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டிகளிலும் அவர் நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!