உலகம்உலகம்செய்திகள்

விண்வெளிக்கு செல்கிறார் அமேசான் தலைவர்!

70views

உலகின் பெரும் பணக்காரரான அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் ஜூலை 20ஆம் தேதி அன்று பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்தில்தான் பெஸாஸ் பயணிக்கிறார்.

அவருடன் அவரது சகோதரர் மார்க் பெஸாஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர் . Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் பெஸாஸ் பயணிக்க உள்ளார் .

பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார் . ‘ ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டுமென்ற பெருங்கனவு எனக்கு உள்ளது . அது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும் ‘ என அவர் தெரிவித்துள்ளார் .

Right Click & View Source is disabled.

error: Content is protected !!