சினிமாசெய்திகள்

விஜயின் அடுத்து படத்திற்கு இவ்வளவு சம்பளமா ? – தெலுங்கு தயாரிப்பாளரின் அறிவிப்பு

229views

நடிகர் விஜய் தற்போது தளபதி 65 படத்தில் நெல்சனின் இயக்குத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றது.

இதனை அடுத்து விஜய், தேனாண்டாள் பிலிம்சின் தயாரிப்பில் நடிப்பார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ அடிக்கடி சென்னை வந்து விஜயின் மேலாளரான ஜெகதீசை அடிக்கடி சந்திப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் விஜயின் அடுத்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மகரிஷி என்ற படத்தின் மூலம் செம்ம ஹிட் கொடுத்த வம்சி பைடிபல்லி என்ற இயக்குனர் விஜய்க்கு கதை கூறியுள்ளதாகவும். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

எனினும் விஜய் இதுவரை எந்த பதிலும் தராததால் தயாரிப்பாளர் தில் ராஜூ விஜய்க்கு 120 கோடி சம்பளம் வழங்குவதாக ஆபர் வழங்கியுள்ளார். இப்படத்தில் விஜய் நடிப்பாராயின் தமிழ் நடிகர் ஒருவர் பெற்ற அதிகபடியான சம்பளமாக இது அமையும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!