ராணுவத்துக்கு தேவையான ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடிபொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 25, ஏ.எல்.ஹெச்., -மார்க் 3 ஹெலிகாப்டர்கள், ராக்கெட் வெடி பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.’இதன் மொத்த மதிப்பு 13 ஆயிரத்து, 165 கோடி ரூபாய்’ என, தெரிவிக்கப்பட்டது. இதில், ஹெலிகாப்டர்களுக்கு 3,850 கோடி ரூபாயும், வெடி பொருட்களுக்கு 4,962 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்த மதிப்பில், 11 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கான உபகரணங்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்படுகின்றன.
154views
You Might Also Like
வேலூரில் புரட்டாசி 4ம் சனிக்கிழமை பெருமாள் அலங்காரம்
வேலூரில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான மையத்தில் புரட்டாசி 4ம் சனிக்கிழமை யொட்டி காலையில் அபிஷேகம் பின்பு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீவெங்கடேச பெருமாளை பக்தர்கள் நீண்ட...
அக்டோபர் 7 உலக பருத்தி தினத்தை நினைவு கூறும் வகையில் ஐக்கிய நாடுகளின் சபையில் பேசிய இந்திய ராஜ்யசபா எம்பி எல்.கே சுதீஷ்
உலக பருத்தி தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வை இந்தியா மற்றும் மாலியின் தூதரகங்கள் இணைந்து நடத்தியது,...
திருப்பதி திருமலையில் உள்ள புனித நீருற்று (குளம்) பற்றி அறிவோம்
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருமலையில் உலக புகழ்பெற்ற இந்து கோயிலான திருப்பதி திருமலை தேவஸ்தானம் உள்ளது. ஸ்ரீவெங்கடேச பெருமாள் சீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமலையில்...
இந்தியாவில் முதன்முறையாக அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஆந்திராவில் 3D கான்கிரீட் வீடுகள்
ஆந்திர மாநிலத்தில் பிரதான் மந்திரி ஆவால் போஜனா - கிராமீனா 2.0 திட்டத்தின் கீழ் (அனைவருக்கும் வீடு) திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் வீட்டு கட்டுமானத்தில் 3D...
திருமலையில் திருப்பதி பக்தரின் சாதனை
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வேங்கட்ரமண மூர்த்தி (70) திருப்பதி திருமலையில் 2600 படிகளில் கால்நடையாக மலை ஏறி 3350 முறை ஸ்ரீவாரி தரிசனம் செய்து உள்ளார்....




