இந்தியா

ராணுவத்தில் ஷார்ட் சர்வீஸ்: ஷின்சோ அபே கொலையை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் திரிணமூல் காங்கிரஸ்

51views

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற இளைஞர் ராணுவத்தில் குறுகிய கால சேவையில் இருந்தவர்.

இதனை சுட்டிக்காட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மத்திய அரசு ராணுவத்தில் அக்னி பாதை போன்ற குறுகிய கால சர்வீஸை அனுமதிப்பதில் உள்ள பாதகங்களை இதன் மூலம் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதனை நிராகரித்துள்ள பாஜக மேற்குவங்க மாநிலத் தலைமை, இந்தியாவில் எந்த ஒரு முன்னாள் ராணுவ வீரரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை என்று சுட்டிக் காட்டியுள்ளது.

முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ‘ஜகோ பங்களா’ பத்திரிகையில், ஷின்சோ அபேவின் படுகொலை அக்னி பாதை திட்டத்தில் உள்ள அபாயத்தை வலுப்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. திரிணமூல் செய்தித் தொடர்பாள குணால் கோஷ் நேற்று பேசுகையில், ”பாஜக அக்னி பாதை திட்டத்தின் மூலம் நெருப்புடன் விளையாடுகிறார்” என்று தெரிவித்தார்.

அபே படுகொலை: ஜப்பான் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஜூலை 10-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ஷின்சோ (67)கடந்த 8-ம் தேதி நாரா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அபே உயிரிழந்தார்.

இதையடுத்து ஷின்சோ அபே உடல் டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் புமியோகிஷிடா, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று அபே உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அபேவை கொலை செய்த டெட்சுயா யமாகாமி 3 ஆண்டுகள் கடற்படையில் வேலை செய்தார். ஓய்வுக்குப் பின்னர் ஓய்வூதியம் எதுவும் வராத நிலையில் அவர் விரக்தியில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஷின்சோ கொள்கைகளின் மீதான அதிருப்தியின் காரணமாகவே இச்செயலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஷின்சோ அபேவின் படுகொலை அக்னி பாதை திட்டத்தில் உள்ள அபாயத்தை வலுப்படுத்தியுள்ளது என்று திரிணமூல் காங்கிரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!