செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை தொடக்க ஆட்டத்தில் இத்தாலி வெற்றி!

59views

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கும் யூரோ கோப்பை கால்பந்து தொடர், வண்ணமிகு கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று தொடங்கியது. இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலியும், துருக்கியும் மோதின.

தொடக்கம் முதலே துருக்கி அணியினர் தடுப்பு ஆட்டத்தையே வெளிப்படுத்த, இத்தாலி அணியில் ஜோர்ஜினியோ, இம்மொபைல் போன்ற நட்சத்திர வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்ட நேர முடிவில் 3 கோல்களுடன் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ள நிலையில், இத்தாலி அணி 9 முறை வெற்றி பெற்றுள்ளது, 3 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!