199views
ஒன்றை மறைக்க
வேறொரு சொல்லைத் தேடுகிறேன்
எதிரில் இருப்பது
நீயெனத் தெரிந்தபோதும்
அன்று உனக்குப் பிடித்ததை
வாங்கித்தர முடியவில்லை
இன்று குவித்த பொருட்களில்
எதையுமே எனக்குப் பிடிக்கவில்லை
உனக்கான விடியலில்
செவ்வானம் வெட்கப்படுகிறது
எனக்கு மட்டுமே தெரியும்
நேற்றைய நிகழ்வுகள்
வாழ்வின் தொடக்கம்தான்
முடிவென அறிவுறுத்துகின்றன
உனது புள்ளிவைத்த
மாக் கோலங்கள்
கண்களோடு பேசிய காலங்கள்
மறைந்து போனாலும்
நெஞ்சில் உருவாகின்றன
நட்பின் சுவடுகள்
-
கா.ந.கல்யாணசுந்தரம்
add a comment