தென்சீனக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தென் சீனக் கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. தென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள மலேசியா நாட்டின் வான் எல்லைக்குள் சீன விமானம் திடீரென அத்துமீறி நுழைந்துள்ளது.
கடந்த 31ம் தேதி மலேசியாவில் எல்லைக்குள் சீன விமானப் படைக்குச் சொந்தமான 16 விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மலேசிய விமானப்படை விமானங்கள் உடனடியாக அப்பகுதிக்கு சென்றது, ஆனால், மலேசியா எல்லையில் இருந்த சீன விமானங்கள் விலகி சென்பருவிட்டது.
இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் மலேசியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. தங்கள் எந்த நாட்டின் வான் எல்லைப்பரப்பிற்குள் விதிகளை மீறி நுழையவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், சர்வதேச சட்ட விதிகள் படி தான் சர்வதேச எல்லைப்பகுதியில் இது வழக்கமான பயிற்சி தான் என சீனா தெரிவித்துள்ளது.