தமிழகம்

மின் கட்டண உயர்வை கண்டித்து 23-ந்தேதி பா.ஜ.க. போராட்டம் -அண்ணாமலை அறிவிப்பு

38views

தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அடுக்கடுக்காக பல சாக்கு போக்குகளை சொல்லி அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் 2 மாதங்களுக்கு 1,000 யூனிட்டுகளுக்கு குறைவாக பயன்படுத்துவோர் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை பயன்பெறுவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் தி.மு.க. குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்று தி.மு.க. அரசு, தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்பட்டு வருகிறது.

அதேவேளை தி.மு.க. அரசு தனது திறனற்ற செயல்பாடுகளை மறைக்க மத்திய அரசை குறை கூறுவதை தமிழக பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவோம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ள பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவது நமது கடமையாகும். மாநில மின் பகிர்மான மையங்களில் சீர்திருத்தங்களை கொண்டு வர ரூ.3.03 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட உள்ளது. தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்திற்கு ரூ.35,981 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியங்கள் இந்த நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டுமானால் நஷ்டத்தை குறைக்க முன்னெடுத்த வழிவகைகள் குறித்து விளக்க வேண்டும்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களில் உற்பத்தி செலவு மற்றும் விற்பனை விலைக்கான இடைவெளியை குறைக்க எடுக்கப்படும் முன்னெடுப்புகள் என்ன? என்பதை மின் வாரியங்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்காக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியானது ரூ.19,235 கோடி. இதை பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு பகுதியிலாவது அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி ஒரு தடவையாவது அதன் மூலமாக மின் கட்டணத்தை கணக்கீடு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதே, தவிர மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் மானியம் கொடுப்போம் என்று எங்கும் சொல்லவில்லை. தி.மு.க.வின் குறுக்கு வழி இந்த சூழலில் தி.மு.க. எடுத்துக்கொண்ட குறுக்கு வழிதான் மின் கட்டண உயர்வு. மின் உற்பத்தி செலவை குறைக்கவும், வருமானத்தை அதிகரிக்கவும் தமிழகத்தில் எடுக்கப்பட வேண்டிய பல முன்னெடுப்புகள் கிடப்பில் கிடக்கிறது.

தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதை அரசு குறைக்க வேண்டும். மின் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்புகளை குறைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். எந்தவித காரணமும் இல்லாமல் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தை இயங்கவிடாமல் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அனல் மின் நிலையத்தின் ‘பிளான்ட் லோட் பாக்டர்’ 80 சதவீதமாக இருக்க வேண்டும். சூரிய சக்தி மின்சாரம் வீட்டு மேற்கூரைகளில் பொருத்திடும்திட்டத்தில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு சரியான நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை அரசு வழங்க வேண்டும். அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலால், அதிகாரிகளின் உதவியோடு, தகுதியற்றவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.

போராட்டம் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தை சீரமைப்பதற்கு முன்பாக இதுபோன்ற கட்டண உயர்வு எந்த பயனையும் அளிக்காது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மின் கட்டண உயர்வை தி.மு.க. அரசு உடனடியாக கைவிட்டு, தமிழக மின் உற்பத்தி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மின் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் பா.ஜ.க. சார்பில் வருகிற 23-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!