மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுலைவாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவு பகலாக மின்னொளியில் நடைபெற்று வந்தது. போட்டிக்கு பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். திருமுல்லைவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர் . பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார் .போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும் , சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர்.
271views
You Might Also Like
உனக்காகத்தான் இந்த வாழ்கை…..
உனக்காகத்தான் - இந்த வாழ்கை..... எனை மலரவைத்து..... மகிழவைத்தவள்... விழிகள் தேடும்போதும்... விரல்கள் அணைக்கும் போதும்... கட்டியணைத்து.... கழிப்பு... கண்டு... பயணங்களின் ராகம்... பறவை போல்...... பறந்துகொண்டே........
வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
SAIAK Media Production வழங்கும் வணக்கம் பண்ணையார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் மிக விமர்சையாக நடைபெற்றது. திரையுலக பிரபலங்களும், முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு...
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து
அகில இந்திய ஸ்ரீ விராட் விஸ்வகர்மா பெண்கள் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்களை திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகரை தமிழக தலைமையிடமாக கொண்டு...
வேலூர் அடுத்த காட்பாடியில் வேலூர்மைய பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
வேலூர் அடுத்த காட்பாடிகாந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்திய வேலூர் மையத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடந்தது. விழாவிற்கு சங்க...
வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அதிமுக, பாமக, பிஜேபி கட்சிகள் பங்கேற்பு
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற துணை...




