சினிமா

மாநாடு படத்திற்காக வெங்கட்பிரபு வாங்கிய சம்பளம்.. வாயடைத்துப் போன ரசிகர்கள்

58views

நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் வெங்கட் பிரபு.

இவர் ஏப்ரல் மாதத்தில், ஜீ, சிவகாசி, மழை, சரோஜா, கோவா என பல படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் பெரும்பாலான படங்கள் பொழுதுபோக்கு சார்ந்த திரைப்படங்களாக இருக்கும்.

2007இல் எஸ்பிபி சரண் தயாரித்த சென்னை 600028 படத்தை வெங்கட் பிரபு முதன்முதலாக இயக்கி இருந்தார். இப்படம் முழுவதும் கிரிக்கெட்டை மையமாக கொண்ட எடுத்திருந்தார். 11 புதுமுக நடிகர்களை கொண்டு சென்னை 600028 படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அத்துடன் இதில் நடித்த நடிகர்கள் எல்லாரும் தற்போதும் பிரபல நடிகர்களாக உள்ளார்கள்.

இப்படத்தை தொடர்ந்து சரோஜா, கோவா படங்களை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். 2011 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து ஆக்ஷன் திரில்லர் படமாக மங்காத்தா படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன்பிறகு பிரியாணி, குட்டி ஸ்டோரி, சென்னை 600028 2 போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்தாண்டு லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியிருந்தார்.

அண்மையில் சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் அமோக வெற்றி பெற்று வசூலை அள்ளிக் குவிக்கிறது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மங்காத்தாவிற்கு பிறகு வெங்கட்பிரபுவுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்த படம் மாநாடு.

இப்படத்திற்காக வெங்கட்பிரபு 5 கோடி சம்பளமாக வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு நடிகர், நடிகர்களை தேர்ந்தெடுத்து அதற்கேற்றார்போல் நடிக்க வைத்திருந்தார். இதுவே படத்திற்கு மிகப்பெரிய வலுவாக அமைந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!