இந்தியாசெய்திகள்

‘மாஜி’ அதிகாரிக்கு சலுகையா? மெஹபூபா முப்தி கேள்வி!

142views

”பயங்கரவாதிகள் தப்பிக்க உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது ஏன்,” என, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை தன் காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக, காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் உதவி எஸ்.பி., தவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 311வது பிரிவின் கீழ் அவரை பதவியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்து துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டப் பிரிவின்படி ஓர் அதிகாரி மீதான விசாரணை ரத்து செய்யப்படும். உயர் நீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும்.

இது குறித்து மெஹபூபா முப்தி, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது எப்போது விசாரணை துவங்கும் என்பதே தெரியவில்லை.ஆனால் பயங்கரவாதிகளை தன் காரில் பாதுகாப்பாக அழைத்து சென்ற முன்னாள் உதவி எஸ்.பி., தவிந்தர் சிங்குக்கு, மத்திய அரசு சலுகை காட்டியுள்ளது .பயங்கரவாதிகள் தப்பி செல்ல உதவியதில், வேறு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!