உலகம்உலகம்

மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை

117views
ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2009 முதல் 2018 வரை மலேசியாவின் பிரதமராக நஜீப் ரஸாக் பொறுப்பு வகித்தபோது, அந்நிய முதலீடுகளை கவா்வதற்காக உருவாக்கப்பட்ட ‘1 மலேசியா மேம்பாட்டு நிறுவனம்’ (1எம்டிபி) மூலம் மொத்தம் 4.2 கோடி டாலரை (சுமாா் ரூ.347 கோடி) சட்டவிரோதமாக பரிவா்த்தனை செய்துகொண்டதாக ரோஸ்மா மீது கோலாலம்பூா் உயா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அந்தக் குற்றச்சாட்டை வியாழக்கிழமை உறுதி செய்த நீதிமன்றம், ரோஸ்மாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
ஏற்கெனவே 1எம்டிபி முறைகேடு வழக்கில் நஜீப் ரஸாக்குக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!