மலேசியாவின் தெரெங்கானு மாநில காவல்துறை, ட்ரோன்களைப் பயன்படுத்தி பொது இடங்களில் மக்களின் அதிக உடல் வெப்பநிலையைக் கண்டறிந்து வருகிறது.
கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் பார்த்துக் கொள்ள தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட யோசனையை மலேசிய காவல்துறை கொண்டு வந்துள்ளது. பொது இடங்களில் அதிக உடல் வெப்பநிலை உள்ளவர்களை அடையாளம் காண காவல்துறை ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர். ட்ரோன்கள் மூலம் பாதுகாப்பான தூரத்திலிருந்து வெப்பநிலையை சரிபார்க்க முடியும். இவை தரையில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் அதிக வெப்பநிலையைக் கண்டறியும். ட்ரோன் அதிக வெப்பநிலை கொண்ட ஒரு நபரை கண்டவுடன், அது அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒரு சிவப்பு எச்சரிக்கை ஒளியை வெளியிடுகிறது .
கொரோனா தொற்றுநோ யின் புதிய அலை பெரும்பா லும் அறியப்படாத தொடர்புகளின் விளைவாக ஏற்படுகிறது என்று நாட்டின் சுகாதார இயக்குநர் ஜெனரல் எச்சரித்த பின்னர் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது .