தமிழகம்

மதுரை மாநகராட்சி 100-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி., புகார் அளித்தும் கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்.

133views
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாநகராட்சி வார்டு எண் 100 உட்பட்ட அவனியாபுரம் இமானுவேல் நகர, துக்கா ராம்தெரு, பிரசன்னா காலனி செல்லும் சாலையில் உள்ள அனைத்து தெருகளும் மற்றும் சாலைகளில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் சாலையை அச்சுத்துடன் கடந்து செல்கின்றனர்.
அதேபோல் வயதானவர்கள் வேலைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் என அனைவரும் கழிவுநீர் தேங்கியிருக்கும் வழியாகத்தான் சாலையை கடந்து செல்கின்றனர். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் உள்பட அனைவரும் வெறும் காலில் சாலையை கடந்து செல்கின்றனர்.
குழந்தைகளை தங்களது பெற்றோர்கள் சாலையின் இரு புறமும் உள்ள படிக்கட்டுகள் கற்கள் மீது ஆபத்தான முறையில் கடந்து சென்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கடந்த இரண்டு வார காலமாக தொடர்ச்சியாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக இப்போகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாராததும் ஒரு சில நபர்கள் கழிவு நீர் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்திருப்பதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தற்போது இப்பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சாலைகளில் தேங்கி கிடக்கிறது.
இதனால் டெங்கு காய்ச்சல் மலேரியா டைபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் வரும் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதைப்பற்றி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேட்டி : 1,கண்ணன், இம்மானுவேல் நகர்.
                  2, வஸந்தி, துக்காராம் தெரு.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!