உலகம்

பேராபத்தில் இந்த நாடு : எச்சரிக்கும் பிரபல மருத்துவர்!

70views

பிரித்தானியா அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் போதாது என Independent SAGE-ன் உறுப்பினர் மருத்துவர் Zubaida Haque எச்சரித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று சில கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவர் Zubaida Haque கூறியதாவது, பல வாரங்களாக ‘பிளான் பி’ கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு கோரிவருகிறோம்.

ஏனெனில், டெல்டா மாறுபாட்டின் போது தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்ததால் நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம்.

பிளான் பி கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த இது சரியான நேரம். நான் உண்மையில் கவலைப்படுவது என்னவென்றால், அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் போதாது.

பள்ளிகளில் குழந்தைகளை முகக் கவசம் அணியவும், வகுப்பறைகளில் காற்றோட்டத்தை அதிகரிக்கவும், பபுள் அமைப்பை மீண்டும் அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் வலியுறுத்த வேண்டும்.

பபுகள் மற்றும் உணவகங்களிலும் கட்டாய முகக் கவச கட்டுப்பாடு அமுல்படுத்த வேண்டும், ஏனெனில் எங்கே நுழைக்கூடாது என வைரஸ்க்கு தெரியாது என மருத்துவர் Zubaida Haque தெரிவித்துள்ளார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!