மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் விநாயகன் கொச்சியில் தனது புதிய படமான ‘ஒருத்தி’ படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் இவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பேட்டியின் போது கேரளாவில் மீ டூ பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறவு வைத்து கொள்வது தான் மீ டூ வா? எனவும் தெரியவில்லை. ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன்.அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன் என கூறினார்.
விநாயகனின் இந்த பேட்டிக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் விநாயகன் கூறிய கருத்துக்கு பெண் டைரக்டர் விது வின்சென்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
விது வின்சென்ட், விநாயகன் சுதந்திரம் என்பது தன் மனதில் தோன்றுவதைப் பேசுவது என தவறாகக் கருதுகிறாரா. குறைந்தபட்சம் அவரது நெருங்கிய நண்பராவது அவரைத் திருத்த வேண்டும்.பத்திரிகையாளர் சந்திப்பில் பெண்களை பற்றி விநாயகன் பேசியதெல்லாம் பெண்களை அவமதிக்கும் செயல். விநாயகன் தன் வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.