சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்துள்ள பான் இந்தியா படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்தநிலையில் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட சில பிரபல நடிகைகளிடத்தில் பேசி வந்தவர்கள். இப்போது கனடா நாட்டு டான்சரான நோரா பதேஹியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த பாடல் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. நோரா பதேஹி பாலிவுட்டில் பல படங்களில் நடனமாடியிருப்பதோடு அங்கு அவரது நடனத்திற்கு ஒரு ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது. அதேபோல் தெலுங்கிலும் ராஜமவுலியின் பாகுபலி, ஜூனியர் என்டிஆரின் டெம்பர் போன்ற படங்களிலும் இதற்கு முன்பு சிங்கிள் பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
97views
You Might Also Like
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற...
55 வது கல்லூரி நாள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், 55 வது கல்லூரி நாள் 09.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்....
கலைஞர் டிவியின் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாள் சிறப்பு திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்
கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற ஏப்ரல் 14 சித்திரிரை திருநாளை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. அதன்படி, வருகிற திங்கள் கிழமைன்று...
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள சங்க அலுவலகத்தில்...
வேலூர் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன், பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். செய்தியாளர்: வேலூர்...