உலகம்உலகம்செய்திகள்

புதிய வரலாறு படைத்த அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ்!

93views

ஏற்கனவே உலக பணக்காரராக திகழும் அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ், 211 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியில் புதிய வரலாறு படைத்துள்ளார். மைக்ரோசாப்ட் உடனான 10 பில்லியன் டொலர் ஜெடி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பென்டகன் அறிவித்ததைத் தொடர்ந்து அமேசான் பங்கு 4.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனால், 57 வயதான பெசோஸ் செவ்வாயன்று மட்டும் 8.4 பில்லியன் டாலர் நிகர மதிப்பைப் பெற்றார் என்று ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெசோஸ் தனது முந்தைய சாதனையை (210 பில்லியன்) முறியடித்துள்ளார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஜனவரி மாதம் 210 பில்லியன் டொலர் நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரராக சில நாட்கள் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக பணக்காரர் பட்டியலில் பெசோஸ் அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் மஸ்க்-ன் நிகர சொத்து மதிப்பு குறைந்து தற்போது 181 பில்லியன் டொலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இதுவரை டெஸ்லா பங்கு கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைந்துள்ள நிலையில், அமேசான் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து 15.4 சதவீதம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!