138
அடிமை விலங்கொடிப்போம்
ஒரு பெண் பிறந்தால் தந்தைக்கு அடிமை!
மணந்தால் கணவனுக்கு அடிமை!
பெற்றால் பிள்ளைக்கு அடிமை!
அவளின் கனவுகள் கைதாகி விடுகிறது!
அரிவையின் ஆசைகள் அழிக்கப்படுகிறது!
நீ அப்படி இருந்தால் அழகாய் இருப்பாய்!
இப்படி இருந்தால் அழகாய் இருப்பாய் அழகைப் பற்றி பேசி பெண்ணை மடமை செய்து அடிமை செய்கிறது ஒரு கூட்டம்!
ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தலைவியானவள்
தினமும் இயந்திரமாக சுழன்று சுழன்று அடிமைப் பிடியில் கட்டி வைத்திருக்கிறது குடும்பம்!
பெண்ணே!
நீ ஆயுதம் ஏந்த வேண்டுமே!
ஆம், அறிவெனும் ஆயுதம் அன்பெனும் ஆயுதம் ஆளுமைமெனும் ஆயுதம்
மனதில் ஏந்தி எழுந்து வா! எழுச்சியை கொண்டு வா!
ஆயுதமேந்தி செயல்படுவோம்! செயல்படுத்துவோம்!
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு
ஈரோட்டின் மைந்தனே!
ஈடு இணையற்ற தந்தையே!
தீண்டாமையை ஒழிக்க வந்த தீயே!
பகுத்தறிவு பகலவனே!
சுயமரியாதையின் சூரியனே!
சூத்திரனை சுயமாக்க வந்த சூத்திரமே!
சாதியை சாக்காட்டிலிட வந்த சாமியே!
பெண்ணடிமைத்தனத்தை போக்க வந்த பெண்மையே!
கடவுளெனும் கட்டுக்கதையை கட்டிவிட வந்த கருப்பனே!
மூடநம்பிக்கைகளை மூடவந்த மூலமே!
எம் தாடிகாரனே!
உம் பேத்தியின்
பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!
பி.மா. வேதா (எ) தாரகை
add a comment