உலகம்

பிரேசில் நிலச்சரிவு: புதையுண்டவர்களை உயிருடன் மீட்க வேகவேகமாக மண்ணை தோண்டும் மீட்புப்படை

38views

பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது.

பிரேசிலில் கடந்த செவ்வாய்கிழமை, திடீரென 25.8 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. மூன்று மணி நேர இடைவெளிக்குள் இவ்வளவு மழை பெய்ததால், மக்களோ அந்நாட்டு அரசோ மழைக்கு தயாராக இல்லை. இந்நிலையில் பிரேசிலின் மலைபாங்கான பகுதியான ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதில் வீடுகள் மண்ணோடு, மண்ணாக புதைந்து போயின. இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவையும் ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பயணிகளுடன் சென்ற பேருந்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், கண்ணாடி ஜன்னல்களை உடைத்து அதில் இருந்து பயணிகள் வெளியே வந்தனர். குறிப்பாக நிலச்சரிவால் பெட்ரோபோலிஸ் நகரம் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் உயிர் தப்பியவர்கள், தங்களது உறவினர்களை உயிரோடு மீட்டு விட மாட்டோமா என அவசரமாக மண்ணை தோண்டும் பணியில் ஈடுபடும் காட்சி அனைவரது நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது.

இதுவரை 117 பேர் உயிரிழந்திருப்பதாக பிரேசில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் நிலச்சரிவால் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை பன்மடங்கு உயரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!