சினிமா

பிருந்தா மாஸ்டர் இப்போ இயக்குனர் அவதாரம்… அதுவும் இவ்வளவு பெரிய ஹீரோ படத்திற்கா ?

69views

இந்திய அளவில், தமிழ் படங்கள் உள்பட பல்வேறு மொழி படங்களுக்கு நடனம் அமைத்து பிரபலமானவர், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் பல நூறு படங் களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.

இவர் முதன்முதலாக ஒரு படத்தை டைரக்டு செய்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஹே சினாமிகா’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை குறித்து இயக்குநர் பிருந்தா கூறியதாவது,

“படத்தின் தலைப்பு வித்தியாசமானதுதான். அதற்கு 2 காரணங்கள் உள்ளன. மணிரத்னம் இயக்கி ‘ஓகே கண்மணி’ படத்தில் இடம்பெற்ற பாடல், ஒரு காரணம். கதைக்கு பொருந்துவது, இன்னொரு காரணம்.

மேற்கண்ட நடிகர்கள் இடையே உள்ள உறவுதான் கதையின் அடிநாதம். காஜல், அதிதி இருவருமே மிகச் சிறந்த நடிகைகள். அவர்களின் பங்களிப்பு, பக்கபலமாக இருந்தது. ஒளிப்பதிவாளரின் பங்கு நிறைய. டைரக்டர் ஆகிவிட்டாலும், நடனத்தை ஒருபோதும் கைவிட மாட்டேன். நடனத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், படங்களை இயக்குவேன்.” என்றார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!