நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மரக்கார்.
இந்தப் படம் நாளை உலகளவில் ரிலீசாக உள்ளது. மொத்தமாக 4100 திரையரங்குகளில் ஒரு நாளில் 16,000 ஷோக்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
புக்கிங்கிலேயே 100 கோடி ரூபாய் வசூல் செய்யவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் மோகன்லால், மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், சுனில் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், ப்ரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் உருவாகியுள்ள படம் மரக்கார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.
படம் சிறப்பான வகையில் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இடையில் ஒடிடியில் வெளியிடவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதே சிறப்பானதாக அமையும் என்று கூறப்பட்டு நாளைய தினம் உலகளவில் படம் ரிலீசாக உள்ளது.
படத்தின் டீசர், ட்ரெயிலர், மேக்கிங் காட்சிகள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு சிறப்பான பிரமோஷன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டீசர் 3வது முறை வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. தமிழிலும் படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கலைப்புலி எஸ் தாணு தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் படம் உலகளவில் 4100 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் ஒரு நாளில் 16000 ஷோக்கள் திரையாக உள்ளதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புக்கிங்குகளில் மட்டுமே 100 கோடி ரூபாயை அள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பிரம்மாண்டத்திற்கு குறைவில்லாமல் உள்ளது.
மலையாளத்தில் அதிகப் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது மரக்கார் படம். எப்போதுமே மோகன்லால் படத்திற்கு சிறப்பான ஓபனிங் மலையாளத்தில் காணப்படும். இதேபோல தமிழிலும் தனக்கான ஒரு மார்க்கெட்டை மோகன்லால் கொண்டுள்ளார். இந்நிலையில் படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெறும் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகியுள்ளது.
பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் மலையாள சினிமாவின் பெருமைக்குரிய படமாக பார்க்கப்படுகிறது. வரலாற்று பின்புலத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. படத்தை இதுவரை பார்த்தவர்கள் சிறப்பான விமர்சனங்களை பதிவு செய்துள்ள நிலையில், நாளைய தினம் படம் ரிலீசாக உள்ளது.