பாகிஸ்தானில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படகில் 100க்கும் அதிகமானோர் இருந்ததாகக் கூறப்பட்டது.
சிந்து ஆற்றில் படகு பயணம் செய்துகொண்டிருந்தபோது கவிழ்ந்தது. அதில் குறிப்பிடப்பட்ட அளவைவிட அதிகமானோர் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலோர் பெண்களும், சிறுவர்களும் ஆவர். பயணிகள் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கிட்டத்தட்ட 90 பேர் முக்குளிப்பாளர்களால் ஆற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்களில் பெரும்பாலும் பெண்கள் என அரசாங்க அதிகாரி ஒருவர் சொன்னார்.
பாகிஸ்தானில் உள்ள கிராமவாசிகள் பெரும்பாலும் படகுகளில் பயணம் செய்வதுதான் வழக்கம். பல பகுதிகளில் சாலை வசதிகள் இல்லாததால் அவர்கள் படகில் பயணம் செய்கின்றனர்.