ஆராய்ச்சியாளர் முதல் வங்கி ஊழியர்கள் மற்றும் இந்திய ராணுவம் வரை பல்வேறு அரசு வேலை வாய்ப்புள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசு வேலை தேடுபவர்களாக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். பல்வேறு அரசு வேலை வாய்ப்புகள் குறித்த விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
இந்திய தரநிலை பணியகம், தேசிய தர நிர்ணய அமைப்பு ஆகியவற்றில் பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆராய்ச்சி பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 28 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஜூன் 25-ம் தேதி வரை தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிஐஎஸ் விஞ்ஞானி பி விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் தங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
அதேபோல, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வுக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. தகுதியுடையவர்கள் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இதற்கான தேர்வு செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தன்னுடைய ஜோத்பூர் அலுவலகத்தில் 47 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி ஜூன் 20-ம் தேதி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் DRDO-வின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேற்குப் பிரிவுக்கான ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 3951 காலிப் பணியிடங்கள் உள்ளன. வரும் ஜூன் 24-ம் தேதி வரை தகுதியுடையவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நேரடியாக ஆட்சேர்ப்பு நடைபெறும், தேர்வும் எதுவும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.