இந்தியா

பட்ஜெட் 2022: காவிரி – பெண்ணாறு உட்பட 5 நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கு வரைவு அறிக்கை தயார் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

29views

2022-23 நிதியாண்டுக்கான இந்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார். அதில், விவசாயம் சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில் முக்கியமானவை:

வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 2.7 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரசாயன உரங்கள் அற்ற இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும். முதற்கட்டமாக கங்கை நதிக்கரையோரம் உள்ள 5 கி.மீ அகலமான தாழ்வாரங்களில் உள்ள விவசாயிகளின் நிலத்தை மையமாக வைத்து இயற்கை விவசாயம் செயல்படுத்தப்படும்.

ஜூரோ பட்ஜெட் இயற்கை விவசாயம், நவீன விவசாய முறைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு, வேளாண் பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்.

எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வது குறைக்கப்பட்டு, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்படும். சிறு தானியங்கள் சாகுபடியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 2022-23 சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்படும்.

விவசாய நிலங்களை அளவிடவும், விவசாய உற்பத்தியை கண்காணிக்கவும், ட்ரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும். பயிர் மதிப்பீடு, நிலப்பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல் ஊக்குவிக்கப்படும்.

விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான ஸ்டார்ட் அப்களுக்கு நிதியளிக்க நபார்டு மூலம் நிதியுதவி செய்யப்படும்.

நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற 44, 000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 44605 கோடி மத்திப்பிலான கென் – பெட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 9 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும். உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகளின் வேளாண்மை, வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்படும்.

தாமன் கங்கை – பிஞ்சால், பார் தபி – நர்மதை, கிருஷ்ணா – கோதாவரி, கிருஷ்ணா – பெண்ணாறு, பெண்ணாரு – காவிரி ஆகிய 5 நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்கான வரைவுத் திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஸ்ரீசைலம் – பெண்ணாறு, நாகார்ஜுன சாகர்- சோமசீலா இணைப்புத் திட்டங்கள் மூலம் சோமசீலா அணைக்கட்டுக்கு கொண்டுவரப்படும் மகாநதி, கோதாவரி ஆறுகளின் உபரி நீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து தமிழ்நாட்டின் காவிரி பெரிய அணைக்கட்டுக்கு கொண்டுவரும் திட்டமே பெண்ணாறு – காவிரி இணைப்புத் திட்டம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!