79
மீண்டும் சிம்பு படத்தை தயாரிக்க போகும் வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கனேஷ் .
சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் மூன்றாவது முறை இனையும் படம் தான் ” வெந்து தனிந்தது காடு ” .இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார் .
இயக்குனர் கௌதம் மேனனின் “என்னை நோக்கி பாயும் தோட்டா ” படத்தை வெளியிட்ட பிறகு ,வேல்ஸ் நிறுவனத்தின் சார்பில் கௌதம் மேனன் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்று அறிவிக்கபட்டிருந்தது .
இந்நிலையில் “ஜோஸ்வா இமை போல் காக்க” படம் கௌதம் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கபட்டு வந்தது .அந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி வேலைகள் போய் கொண்டிருக்கும் நிலையில் . தற்போது கௌதம் சிம்பு இனையும் படப்பிடிப்பும் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கனேஷால் துவங்கபட்டது .கடந்த சில நாட்களுக்கு முன் திருசெந்தூரில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தபட்டது குறிப்பிடதக்கது .
இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் தற்போது வேல்ஸ் சார்பாக மற்றொரு அறிவிப்பு வந்துள்ளது, வேல்ஸ் தயாரிப்பு நிறுவன சமூக வளைத்தல பக்கத்தில் வந்திருக்கும் அறிவிப்பில் .சிம்புவின் 48வது படத்தையும் வேல்ஸ் நிறுவனமே தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்த படத்தை “இதற்குத்தானோ ஆசைபட்டாய் பாலகுமாரா” ,”காஷ்மோரா”,”ஜுங்கா” ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தற்போது அசுரவேகத்தில் படங்களில் நடித்து வருகிறார் சிம்பு .சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து மகா ,”மஃப்டி” தமிழ் ரீமேக்கான பத்து தல ,வெங்கட் பிரபுவின் மாநாடு மற்றும் அட்மேன் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.
இந்த நிலையில் சிம்புவின் அடுத்த பட அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது .இந்த அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து ரசிகர்கள் வேல்ஸ் நிறுவனம் வெளியிட்ட காணொளியை சமூக வளைத்தலங்களில் பகிர்ந்து வருகின்றனர் .
சில நாட்களுக்கு முன் சிம்பு மேல் தயாரிப்பாளர் சங்கம் நீண்ட நாட்களாக போட்டிருந்த ரெட்கார்டையும் நீக்கியுள்ளது குறிப்பிடதக்கது .இதனால் சிம்பு பட தயாரிப்பு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் படங்கள் அனைத்தும் வரிசையாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
-
கே.எஸ்.விஷ்ணுகுமார்