இந்தியா

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

43views

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் துவங்க உள்ளது. இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். வரும் 2022 – 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நாளை காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் வகையில் ராஜ்யசபா காலையிலும், லோக்சபா மாலையிலும் கூட உள்ளன.வரும் 2 முதல், ஜனாதிபதி உரையின் மீதான விவாதம் நடக்கும். வரும் 7ல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க உள்ளது. அதனால் இந்தக் கூட்டத் தொடரை அரசியல் ரீதியில் பயன்படுத்த அனைத்து கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.விவசாயிகள் பிரச்னை, அண்டை நாடான சீனாவுடனான எல்லை பிரச்னை, ‘ஏர் இந்தியா’ நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்றது உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மேற்காசிய நாடான இஸ்ரேலிடம் இருந்து பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இந்தியா வாங்கியதாக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ ஆங்கில பத்திரிகையில் சமீபத்தில் கட்டுரை பிரசுரமானது. இந்தப் பிரச்னையையும் கையில் எடுத்து, ஆளும் தரப்புக்கு நெருக்கடி கொடுக்க காங்., திட்டமிட்டுள்ளது.ஒ

ருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து முக்கிய பிரச்னைகளை பார்லிமென்டில் எழுப்ப உள்ளதாக காங்., ஏற்கனவே கூறியுள்ளது. இதை எதிர்கொள்வதற்கு ஆளும் தரப்பும் தயாராகி வருகிறது. அதனால் இந்தக் கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சபையை முடக்காமல், விவாதத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என, ஆளும் தரப்பில் இருந்து வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!