விளையாட்டு

நாங்கள் மேட்ச் வின்னர்கள், ஸ்டார் என்றால் வெற்றி பெறச் செய்ய வேண்டும்- சச்சின், இந்திய பவுலர்களைக் குத்திக் காட்டும் அக்தர்

84views
சச்சின் டெண்டுல்கரின் ஆகிருதி பற்றி தான் கிரிக்கெட்டுக்குள் நுழைந்த போது ஒன்றும் தெரியாது என்று கூறிய ஷோயப் அக்தர், ஸ்டார் என்றால் அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இந்திய பவுலர்களுக்கும் தங்கள் பாகிஸ்தான் பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் வெற்றி முனைப்பே என்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
எனக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படிப்பட்ட ஆகிருதி என்று தெரியாது, சக்லைன் முஷ்டாக்தான் கூறினார். எனக்கு சச்சினை தெரியாது, நான் என் உலகில் மூழ்கிக் கிடந்தேன். நான் என்ன செய்யப்போகிறேன் என்பதில்தான் கவனம், பேட்டர் என்ன நினைக்கிறார், நான் என்னச் செய்யப்போகிறேன் என்பதில்தான் என் முழு கவனமும் இருந்தது.
உங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் வேகமாக வீச வேண்டும், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், போட்டியை வெல்ல வேண்டும் என்பதே, பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகிறது என்றால் என்னிடம் பவுலிங்கைக் கொடுத்தால் எதிரணியை சுருட்டி விடுவேன் என்ற சிந்தனைதான் என்னிடத்தில் மேலோங்கி இருக்கும்.
நான் அங்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தானுக்கு போட்டியை வென்று தருவேன். மேட்ச் வின்னராக இல்லாமல் ஸ்டாராக இருக்க முடியாது. நாங்கள் நாட்டுக்காக வெற்றிகளைப் பெற்று தருபவர்கள்.
இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர். ஏதோ மற்றவர்களெல்லாம் சும்மா விளையாட்டுக்கு ஆடுவது போலவும் இவர்கள்தான் வெற்றிக்கு ஆடுவது போலவும் தற்பெருமை பீற்றிக்கொள்கிறார் ஷோயப் அக்தர்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஆசியாக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஜூலை 28ம் தேதி மோதுகின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!