சினிமா

நடிகர் கார்த்தி ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள்! அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகம்! இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்!

112views

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் கார்த்தி ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார். இன்று பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு 18 ஆம் தேதி தேனியில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

‘விருமன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை முத்தையா இயக்குகிறார். இதற்கு முன்பு கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா மீண்டும் கார்த்தியுடன் களமிறங்குகிறார். இந்த படத்திலும் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘விருமன்’ படத்தின் தலைப்போடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா, அதிதி ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவன் இசையமைக்கிறார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!