தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ₹184 அதிகரித்த நிலையில், நேற்று சவரனுக்கு அதிரடியாக ₹248 குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையைப் பொறுத்துதான் இந்திய வணிக சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் மீதான முதலீடுகளின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் பெயரளவுக்கு குறைவது என்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அப்படியே குறைந்தாலும் மறுநாள் அதே வேகத்தில் உயர்ந்தும் வந்தது.
நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் உயர்வை சந்தித்தது. கிராமுக்கு ₹23 அதிகரித்து ஒரு கிராம் ₹4,659க்கும், சவரனுக்கு ₹184 அதிகரித்து ஒரு சவரன் ₹37,272க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்தால் பெயரளவுக்கு குறைவதும், அதிகரித்தால் அதிகப்படியாக உயர்ந்து வருவதும் நகை வாங்குவோரிடையே ஒரு குழப்பமான சூழ்நிலையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில்ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, நேற்று சவரனுக்கு ₹248 குறைந்துள்ளது. இதனால் தங்கம் ஒரு சவரன் ₹37,024க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ₹4,628க்கும் விற்பனையாகிறது.