விளையாட்டு

தொடர்ந்து அசத்தும் பி.வி.சிந்து! சீன வீராங்கனையின் மன உறுதியைக் குலைத்து வெற்றி

141views

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார்.பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளை கைப்பற்றினார் .இதனால் 17-21, 21-11, 21-19. என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

முதல் செட்டில் 15-15 என்று சமநிலை எட்டிய போது பிடியை நழுவ விட்டார், அதுவும் ஒரு ரிவியூ செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டார். இதனையடுத்து முதல் கேமில் 17-21 என்று சீன வீராங்கனையிடம் இழந்தார்.

ஆனால் 2வது செட்டில் சிந்துவிடம் ஆக்ரோஷம் புகுந்தது, ஸ்மாஷ்கள், வாலிகள் என்று அருமையாக ஆடி 7 புள்ளிகளை தொடர்ந்து பெற்று 2வது செட்டை 21-11 என்று கைப்பற்றி சீன வீராங்கனையின் மன உறுதியை சிதறடித்தார். நெட் அருகில் வந்து ஆடுதல், பவர் ஃபுல் ஸ்மாஷ்கள், ஷாட்டின் கோணங்களில் புதுமை என்று சீன வீராங்கனைக்கு ஒரு புரியாத புதிரானார் பி.வி.சிந்து.

3வது செட்டிலும் தனது புதிரான ஆட்டத்தை சிந்து தொடர ஆரம்பத்திலேயே லீட் எடுத்தார். ஆனால் இடைவேளைக்கு முன்னதாக சீன வீராங்கனை ஹான் யூ சற்றே ஆக்ரோஷத்துடன் சாதுரியமும் காட்டி 3 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தார்.சிந்துவின் ஷாட் ஒன்று வைட் என்று நடுவர் தீர்மானிக்க ரிவியூ செய்தார் சிந்து ஆனால் பலனளிக்கவில்லை.

இடைவேளையின் போது பயிற்சியாளரிடம் பேசி ஆலோசனை பெற்ற சிந்து பிறகு லாங் ரேலிக்களை ஆடினார். அதில் சீன வீராங்கனையை அங்கும் இங்கும் அலைய விட்டு 5 புள்ளிகளை தொடர்ச்சியாக பெற்று 14-14 என்று சமன் செய்தார். மேலும் இரண்டு புள்ளிகளை அபார ஸ்மாஷ்களினால் பெற்ற சிந்து 16-14 என்று முன்னிலை பெற்றார். ஆனால் சீன வீராங்கனை விடாமல் விரட்டி 16-16 என்று நெருக்கினார்.

பிறகும் இருவரும் விடாப்பிடியாக ஆட 19-19 என்று சமன் ஆனது. ஆனால் சிந்து அதன் பிறகு பிரமாதமாக ஆடி பதற்றமடையாமல் 2 புள்ளிகளை பெற்று 21-19 என்று வெற்றி பெற்று வெற்றிக்கூச்சலிட்டார். ஆனால் இந்த ஆட்டம் சிந்துவின் ஒரு தனித்திறமையான ஆட்டமாகும் எல்லா செட்களிலும் பின்னாலிலிருந்து முன்னிலை பெற்று போராடி, கடின உழைப்புடன் பெற்ற வெற்றியாகும் இது, அரையிறுதியில் இன்னொரு கடினமான போட்டி காத்திருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!