விளையாட்டு

தேசிய விளையாட்டு போட்டி; போல்வால்டில் தமிழக வீராங்கனை புதிய தேசிய சாதனை

127views
தேசிய விளையாட்டு தொடரில் போல்வால்டில் தமிழக வீராங்கனை மீனா ரோசி 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்து தங்க பதக்கம் வென்றார்.
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று காந்திநகர் மைதானத்தில் நடந்த தடகள போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி கணிசமான பதக்கங்களை வென்றனர்.
மகளிருக்கான போல்வால்ட் (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
 இதற்கு முன்பு 2014-ம் ஆண்டில் தமிழக வீராங்கனை வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. அந்த 8 ஆண்டு கால சாதனையை சென்னையை சேர்ந்த 24 வயது ரோசி மீனா தகர்த்தார். தமிழக வீராங்கனைகள் பவித்ரா (4 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், பாரனிகா (3.90 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!