தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழக வீரா் பிரவீண் சித்ரவேல் தங்கம் வென்றார் .
முதல் முயற்சியிலேயே பிரவீண் சித்ரவேல் 16.88 மீட்டா் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார் . சா்வீசஸ் வீரா் அப்துல்லா அபுபக்கா் 16.84 மீ கடந்து வெள்ளியும் , சக வீரா் கார்த்திக் உன்னிகிருஷ்ணன் 16.80 மீ கடந்து வெண்கலமும் வென்றனா் .
இந்திய வீரா்களில் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டவா்கள் வரிசையில் , ரஞ்சித் மஹேஸ்வரி (17.30 மீ ), அா்விந்தா் சிங் (17.17 மீ ) ஆகியோரை அடுத்து பிரவீண் 3 ஆவது இடத்தில் உள்ளார் .
மகளிருக்கான 200 மீட்டா் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை அா்ச்சனா சுசீந்திரன் , தில்லியின் தரன்ஜீத் கௌரை தோற்கடித்து முதலிடம் பிடித்தார். ஆடவா் 200 மீ ஓட்டத்தில் அஸ்ஸாம் வீரா் அமலன் 20.75 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
மகளிர் சங்கிலி குண்டு எறிதலில் மஞ்சு பாலா சிங் 64.42 மீட்டா் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். ரயில்வேயின் சரிதா ரோமித் சிங், ஜோதி ஜாக்கா் ராணா ஆகியோர் முறையே அடுத்த இரண்டு இடங்களைப் பிடித்தனா்.
10,000 மீட்டா் ஓட்டத்தில் சா்வீசஸ் வீரா் கார்த்திக் குமார் மகாராஷ்டிர வீரா் சஞ்சீவனி பாபுராவ் ஜாதவ் ஆகியோர் முதலிடம் பிடித்தனா்.