கவிதை

“தென்றல் சுகம்”

228views
“தென்றல் சுகம்” என்ற தலைப்பில்13.2.2022 அன்று ஒலிப்பரப்பான “ரமணி ராஜ்ஜியம்” நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்ட கவிதை
உன்னைப்போல் நானிருக்க
என்னுள்ளம் ஏங்குதடி!
உள்ளத்தில் நிறைந்தவரிடத்து
உன்னைப்போல் நானிருக்க
என்னுள்ளம் ஏங்குதடி!
தென்திசை தேவதையே!
மென்மையான வசந்தகால வருகையே!
இனிமையை எல்லோருக்கும்
அள்ளித்தரும் சமதர்ம தென்றலே!
அருமையான சுகத்தால் அகப்புறத்தினை
ஆளும் அருமருந்தே!
நறுமணம் கமழ நீ தொட்டுத் தழுவ
சுமைகள் விட்டு விலகிப் போகுமடி!
மனச் சுமைகள் விட்டு விலகிப் போகுமடி!
கவலையெனும் அரக்கனை வீழ்த்தும்
வீசு மாய மென்மையே!
இளவேனில் பருவத்து இனிமை நீ!
இதம் நீ! உண்மையே!
சந்தடியின்றி சுக சங்கம சங்கதி
உன்னால் நிகழுதடி!
மணம்வீசும் மலர்களின் மகரந்தச் சங்கமம்
உன்னால் நிகழுதடி!
இனிய தருணத்தைத் தரும்
இதமான தென்றலே!
மிதம் நீ! உன்னதம் நீ!
உன் இதம் தரும் சுகம் துய்க்க
என் ஆயுள் போதாதடி!
தெள்ளிய நீரோடையே! தெவிட்டாத தமிழமுதே!
அதிகாலை சூரியனே! அந்திமாலை சந்திரனே!
அழகுக்கு அழகூட்டும் அழகிய அசைவே!
அனைவரும் விரும்பும் அம்சம் நீயே!
நால்வகைக் காற்றில் நாயகி நீ!
கவிஞர்களின் கற்பகத் தரு நீ!
உள்ளங்களை வளமாக்கும்
கள்ளமில்லா இயற்கை வரம் நீ!
சோகக் குடுவைக்குள் நீ வீசி
சுகமாய் மாற்றும் (வேதியியல்) அறிவியல் ஆச்சர்யம் நீ!
உன்னைப்போல் நானிருக்க
என்னுள்ளம் ஏங்குதடி, தென்றலே!
-கவிதாயினி நர்கிஸ் பானு ஜியாவுத்தீன்
சென்னை.

1 Comment

  1. வாழ்த்துகள் சகோ கவிதாயினியே !

Leave a Reply to கவிஞர்.அ.முத்துசாமி , தாரமங்கலம் . Cancel reply

Right Click & View Source is disabled.

error: Content is protected !!