உலகம்உலகம்செய்திகள்

தாய்லாந்தில் கால்நடைகளுக்கு புதிய தொற்று நோய் – அவற்றை நடமாட விடுவதற்கு தடை.

101views

தாய்லாந்தில் மக்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அசௌகரியங்களை சந்தித்து வரும் சூல்நிலையில் அங்கு கால்நடைகளையும் பதிய வகையான தொற்று தாக்கி வருகின்றது.

இதன் காரணமாக ஆடு, மாடு, எருமை போன்ற விலங்குகள்  இடம் பெயரக்கூடாதென  கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளுக்கிடையே இந்தக் கிருமிப் பரவலைத் தடுக்கவே இந்தக் கடும் கட்டுப்பாடு நேற்று விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கால்நடைகளின் தோலில்  கட்டிகளை  இந்த வைரஸ் ஏற்படுத்துவதுடன் அவற்றின் பால் உற்பத்தியும் பாதிக்கப்படுவதாகக்  கூறப்படுகிறது.

ஈக்கள், நுளம்புகளால் பரவும் இந்த நோய் தாய்லாந்தில் புதிதாகப் பரவினாலும் அதனால்  ஏற்கெனவே 6.700 கால்நடைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.  ஆனால், இந்த  நோயால் கால்நடைகள் உயிரிழப்பது அரிது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளிலிருந்து கால்நடைகளைக் கடத்தி வரப்படுவதாலும், உள்நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு இல்லாததாலும் இதுபோன்ற நோய்கள் பரவுவதாக  அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தய்லாந்து அரசு வெளியிட்டுளள தகவல்களின் படி, அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட  தரவுகளுக்கமைய 707,000 பசு மாடுகளும், 6.2 மில்லியன் இறைச்சிக்காக வளர்க்கப்படும்  மாடுகளும், 1.2 மில்லியன் எருமைகளும் வளர்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!