உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பல்வேறு விஐபிக்களும் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் தாங்கள் டூர் சென்ற போட்டோக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வரிசையில் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி தனது அந்தமான் பயணத்திலிருந்து பிகினி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்தமான் ஆண்களுக்கு நடுவே தான் பாதுகாப்பானதாக உணர்ந்ததாகவும் தனது ஆடையை அவர்கள் தவறான கண்ணில் பார்க்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில், “தவறு ஆடையில் இல்லை..அதைப் பார்க்கும் கண்களில்தான் உள்ளது. அந்தமானில் ஒரு ஆண்கள் கூட என்னைப் பாதுகாப்பற்றோ அல்லது அசௌகரியமாகவோ உணரவைக்கவில்லை. இத்தனைக்கும் நான் கடற்கரைக்கு ஏற்றது மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தேன். அதனால் தவறு நிச்சயம் ஆடையில் இல்லை அதைப் பார்க்கும் கண்களில்தான் உள்ளது.
இன்று உலக சுற்றுலா தினம். இந்த நாளில் எனது ஆசையெல்லாம் ஒன்றுதான் பயணம் செய்யும் ஒவ்வொரு சிறுமியும், பெண்களும் திருநர்களும் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணரவேண்டும். ஆண்களும் பயணத்தின்போது மகிழ்வாக உணரவேண்டும். இந்த பெருந்தொற்று காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது சுற்றுலாத்துறைதான் கடைசியாக மீண்டெழுந்ததும் இந்தத் துறை. இதை நம்பி நிறையபேர் வாழ்க்கை உள்ளது. அவர்கள் அனைவரும் இந்தச் சூழலில் இருந்து எப்படியேனும் மீண்டு வரவேண்டும் என நான் பிரார்த்தனை செய்கிறேன்”
அந்தமானில் பாரா க்ளைடிங் செய்த வீடியோவையும் பதிவேற்றியுள்ள ‘டிடி’ தனது கால்களில் உள்ள பிரச்னையால் பாரா க்ளைடிங் செய்ய பயந்ததாகவும் ஆனால் பாரா க்ளைடிங் நிபுணர்கள் தனக்கு கூடவே இருந்து உதவியதாகவும் கூறியிருந்தார்.