சினிமா

“தளபதி66” படத்தில் இணையும் பிரபலம்.. அப்போ பரபரப்புக்கு பஞ்சமே இல்ல.. எகிறும் எதிர்பார்ப்பு

64views

தளபதி66 படத்தில் இணையும் பிரபலத்தால் இப்படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தினை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி “தளபதி66” படத்திற்கு இயக்குனர் ராஜூமுருகன் வசன எழுத்தாளராக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் பல படங்களில் அதிரடி வசனங்களை எழுதி இருக்கிறார். குறிப்பாக ஜிப்ஸி படத்திற்கு இவர் எழுதிய வசனத்திற்கு சென்சாரில் பல கட் விழுந்துள்ளது. மேலும் இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்களில் அரசியல் வசனங்கள் அதிரடியாய் இருக்கும்.

எனவே இவர் இப்படத்தில் பணிபுரிவதால் தளபதி66 படத்தில் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது என்று சினி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் தேசிய அளவில் பிரபலமான ஜெய்பீம் படத்தில் இடம்பெற்றிருந்த “தல கோதும் பூங்காத்து” என்ற பாடலையும் இவரே பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!