செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணி – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு…!

40views

இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியாவுக்கு எதிரான 17 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியை நேற்று அறிவித்துள்ளது.

அதில்,எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்ட ராபின்சன் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார்.பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சாம் குர்ரன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தேர்வாளர்கள் ஜானி பேர்ஸ்டோவுக்கு அவரது டெஸ்ட் வாழ்க்கையை புதுப்பிக்க மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளனர். மேலும்,தற்போது பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அபார சதம் எடுத்த ஹசீப் ஹமீது இடம்பெற்றுள்ளார்.

ஆனால்,வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸுக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை என்பதால் அவர்கள் இருவரும் அணியில் இடம்பெறவில்லை.

இங்கிலாந்தின் 17 பேர் கொண்ட அணி :

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டோம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராலி, சாம் குர்ரான், ஹசீப் ஹமீது, டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், டோம் சிபிலி, பென் ஸ்டோக்ஸ் , மார்க் உட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா VS இங்கிலாந்து கவுண்டி லெவன் அணி:

டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.இப்போட்டியில்,இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா உள்ளார்.

இதில்,இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், கவுண்டி லெவன் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து சுருண்டது.எனவே,91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!