ஜெர்மனி கால்பந்து ஜாம்பவானும், பேயர்ன் மியூனிக் அணியின் முன்னாள் வீரருமான ஜெர்ட் முல்லர்(79) காலமானார்.
இவர் பேயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடி 607 போட்டிகளில் 566 கோல்கள் அடித்துள்ளார். பண்டஸ்லிகா கால்பந்து லீக்கில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனைக்கு இப்போதும் இவர்தான் சொந்தக்காரர்.
1972 யூரோ கோப்பை, 1974இல் உலகக் கோப்பை வென்ற அணியில் ஜெர்ட் முல்லர் இடம் பெற்றிருந்தார். இவருக்கு கடந்த 2015ஆம் ஆண்டு மறதி நோய் ஏற்பட்டது.
மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்த இவர் காலமானார் . இவரது மறைவிற்கு ஜெர்மனி கால்பந்து ரசிகர்கள் , கால்பந்து நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
எஃப் . சி பேயர்ன் மற்றும் அதன் அனைத்து ரசிகர்களுக்கும் இன்று ஒரு சோகமான , இருண்ட நாள் என்று பேயர்ன் முனிச் கால்பந்து கிளப்பின் தலைவர் ஹெர்பர்ட் ஹைனர் தெரிவித்துள்ளார் . உலக கால்பந்தின் சிறந்த குணாதிசயம் கொண்ட நபர் முல்லர் எனவும் அவர் கூறியுள்ளார் .