செஸ் ஒலிம்பியாட் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. தமிழக வீரர் பிரக்ஞானந்தாவால் ரசிகர்கள் ஏமாற்றம்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது. சுமார் 350 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் முடிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்று தீர்மாணிக்கப்படும்.
வெற்றி பெற்றால் 2 புள்ளிகள், தோல்வி அடைந்தால் புள்ளிகள் கிடையாது மற்றும் சமன் செயத்ல் ஒரு புள்ளிகள் கிடைக்கும். இந்த நிலையில், இந்திய அணி ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகளை களமிறக்கியுள்ளது. இதில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. இதில் பி அணியில் உள்ள தமிழகத்தின் நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இதனால் இன்று அவர் களமிறங்கவில்லை. இதனையடுத்து, இந்தியா பி அணியில் உள்ள சத்வாணி ரவுணக், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அப்துல் ரஹமானை எதிர்கொண்டார். சத்வாணி முதலில் வெள்ளை நிற காய்களை கொண்டு விளையாடினார். தொடக்கம் முதலே சத்வாணி ரவுனாக், அதிரடியாக விளையாடி எதிரணி வீர்ர்களின் முக்கியமான காய்களை நகர்த்தினார்.
இதனையடுத்து 36வது நகர்த்தலில் ரஹ்மான் தனத தோல்வியை ஒப்பு கொள்ள , சத்வாணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் இந்திய அணி தற்போது முதல் வெற்றியை பெற்றுள்ளது. தற்போது இந்தியா பி அணி 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இதே போன்று மகளிர் பிரிவில், ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய சி அணி வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரத்யூஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.