விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்.. ஆட்டத்தின் போக்கை மாற்றிய பிரக்ஞானந்தா

55views
செஸ் ஒலிம்பியாட் தொடரின் 9-வது சுற்றில் பிரக்ஞானந்தாவின் அசத்தல் ஆட்டத்தால், ஆடவர் இந்திய ‘பி’ அணி தோல்வியின் பிடியில் இருந்து தப்பியது.
அதேவேளையில், வலுவான மகளிர் ‘பி’ அணி முதல் தோல்வியை சந்தித்த போதும், தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இந்திய ஆடவர் ‘ஏ’ அணி, பிரேசில் அணிக்கு எதிராக காய் நகர்த்தியது. இதில், ஹரி கிருஷ்ணா மற்றும் விதித் சந்தோஷ் டிராவை சந்தித்த போதும், தமிழக வீரர் சசி கிரண் வெற்றிபெற்று, தனது அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும், அர்ஜூன் தனது எதிராளியை வீழ்த்தியதன் மூலம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய ‘ஏ’ அணி வெற்றிபெற்றது..
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்திய ஆடவர் ‘பி’ அணி, தனது ஒன்பதாவது சுற்றில் அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், குகேஷ் மற்றும் நிஹல் சரின், தங்களது எதிராளிகளிடம் போராடி டிரா மட்டுமே செய்ய முடிந்தது. ஆனால், சத்வானி தோல்வியைத் தழுவி பின்னடைவை ஏற்படுத்தினார். இதனால், 9-வது சுற்றில் தோல்வியின் பிடியில் இருந்து தனது அணியை காப்பாற்ற, பிரக்ஞானந்தா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதில், சமயோசிதமாக செயல்பட்டு, நுட்பமாக காய் நகர்த்திய பிரக்ஞானந்தா, 66-வது நகர்த்தலில் அஜர்பைஜான் வீரர் வசிஃப்-ஐ வீழ்த்தினார். இதன் மூலம், இப்போட்டியை 2-2 என இந்திய ‘பி’ அணி டிரா செய்து, பதக்க வாய்ப்பை தக்கவைத்தது.
இந்திய ‘சி’ அணி, பராகுவே அணியை சந்தித்தது. இதில், சேதுராமன், கார்த்திகேயன் மற்றும் அபிமன்யு ஆகியோர் வெற்றிபெற்று, தங்களது அணிக்கு வலு சேர்த்தனர். அதேவேளையில், சூர்ய சேகர் தடுமாறிய போதும், இந்திய ‘சி’ அணி, 3-1 என பராகுவே அணியை வீழ்த்தியது.
மகளிர் அணியை பொறுத்தவரை ஒன்பதாவது சுற்றில் இந்திய ‘ஏ’ அணி, பலம் வாய்ந்த போலந்து அணிக்கு எதிராக காய் நகர்த்தியது. இப்போட்டியில், கொனேரு ஹம்பி, ஹரிகா மற்றும் தான்யா ஆகியோர் தங்களது எதிராளியிடம் சரணடையாமல் போட்டியை டிரா செய்தனர். இதனால், தமிழக வீராங்கனையும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலி, வெற்றிபெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு அவர் நீண்ட நேரம் போராடினார். ஆனால், அவரை எதிர்கொண்ட போலந்து வீராங்கனை ஒலிவியா, 80-வது நகர்தலில் வெற்றிபெற்றார். இதனால், இந்திய மகளிர் ‘ஏ’ அணி, தனது முதல் தோல்வியை சந்தித்தது

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!