உலகம்உலகம்செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் இறக்கப்பட்டுள்ள புதிய ரோபோட்..!

52views

செவ்வாய் கிரகத்தில் தரையிரக்கப்பட்டுள்ள பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதரங்களைத் திரட்டி வருகிறது..!

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிரக்கப்பட்டுள்ள நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ரோபோட் அந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றதா? என ஆராய்ந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள பள்ளத்தாக்குகளில் இந்த ரோபோட் தனது ஆய்வு பயணத்தை தொடங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தற்போது, ரோவர் ஆராயப் போகும் பள்ளமானது பல பில்லியன் ஆண்டுகளுக்குமுன் பெரிய ஏரியாக இருந்தது என சொல்லப்படுகிறது. தற்போது நீரின்றி காணப்படும் இந்த சிவப்பு கிரகம் ஒரு காலத்தில் ஈரமாக நீரோட்டத்துடன் இருந்துள்ளது.

எனவே, இந்த ஆராய்ச்சியின் இறுதியில் பெர்சவரன்ஸ் ரோவர் நேவிகேஷனைப் பயன்படுத்தி தனக்கான கட்டளையை எடுத்துக்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!